பெண்களை முன்னிலைப் படுத்தி பேமிலி - ரொமான்ஸ் - த்ரில்லர் - மிஸ்டரி நாவல்கள் எழுதி, எங்களையும் இந்தக் கதையை எழுத தூண்டிய மறைந்த 'மேரி ஹிக்கின்ஸ் கிளார்க்' அவர்களுக்கு இந்த நாவல் எங்களின் அன்பு சமர்ப்பணம்!
கதையைப் பற்றி:
'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?
ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?
நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.
இது ஒரு குடும்பம் - காதல் - மர்மம் நிறைந்த கதை!
ஒரே தொடக்கத்தில் இருந்து இரண்டு வித கதைகள் என்று சில வருடங்களுக்கு முன் நான் செய்த முயற்சியில் ஒரு பகுதி தான் இந்தக் கதை.
[ அந்த முயற்சியின் இன்னொரு பகுதி ‘பனிப்பாறை’ என்றப் பெயரில் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது. ]இந்தக் கதை, ஒரு நடுத்தர வயதுப் பெண் திடீரென குடும்பத்தில் ஏற்படும் கணவன் மனைவி சலசலப்பை, பண பற்றாக்குறையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை சொல்கிறது. அச்சுறுத்ததலாக வருபவற்றையும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளும் ஹீரோயின் இவள்! அவளுக்கு அவளுடைய கணவனும் துணையாக இருக்கிறான்!
கதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
திருமண வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றாக இருப்பதில்லை! நம் பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு பின் என் குடும்பம் என்று வட்டத்திற்குள் தங்களை நுழைத்துக் கொள்பவர்கள் அதிகம்.
இந்த கதையின் கதாநாயகி கல்பனாவும் அப்படி தான்! கணவன் - குழந்தைகள் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழ்கிறாள். அவளின் நம்பிக்கையை உடைத்து அவளின் கணவன் அவளை கைவிடும் போது, இலகுவான தண்ணீர் எப்படி டைட்டானிக் போன்ற பெரிய கப்பலை கவிழ்க்கும் பனிப்பாறையாக மாறுகிறதோ அதேப் போல தன் நிலையில் இருந்து மீண்டு எழுந்து வருகிறாள்!
பொதுவாக சந்தோஷமான கதைகளையே எழுதி பழக்கப் பட்டு போயிருந்த எனக்கு கல்பனாவை இப்படி ஒரு நிலையில் விட மனம் வரவில்லை... அதனால் தான் இதே கதைக்கு சந்தோஷமான alternate version ஒன்றும் கொடுத்தேன்.
ஆனால் இந்த கல்பனா... அவளின் வலி... அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் அவளின் வலுவான ஆளுமை என்னையே ஆச்சர்யப் படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!